லேடி சிவசாமி பள்ளி அணிக்கு எட்டு பதக்கங்கள்!
சென்னை: மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டியில், லேடி சிவசாமி பள்ளி அணிக்கு, எட்டு பதக்கங்கள் கிடைத்தன. மதுரையில் பள்ளி அணிகள் பங்கேற்ற, மாநில அளவிலான, குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதில், லேடி சிவசாமி பள்ளி அணி பங்கேற்றது. அந்த அணியை சேர்ந்த பிருந்தா, குண்டு எறிதலிலும், ஜெயக்கொடி, 4க்கு100மீ., தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றனர். ரம்யா, நீளம் தாண்டுதலில் தங்கமும், மும்முறை தாண்டுதலில் வெண்கல பதக்கமும் பெற்றார். கிருபா, 400மீ., போட்டியில் வெண்கலம், தேவிப்ரியா, 4க்கு100மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றனர். எமிமாள் பியூலா, உயரம் தாண்டுதலில் வெண்கலமும், 4க்கு100மீ., தொடர் ஓட்டத்தில் தங்கமும் வென்றனர்.