உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலை கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள்

உடுமலை: பாரதியார் பல்கலை., கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள், உடுமலையில் துவங்கின. கோவை பாரதியார் பல்கலை., மற்றும் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி இணைந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியை, உடுமலை நேதாஜி மைதானத்தில் நடத்துகின்றன. திருப்பூர் உட்பட 4 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி அணிகள், இதில் பங்கேற்றுள்ளன. முதல்கட்ட போட்டியில், 8 அணிகள் மோதின. ஊட்டி அரசு கலைக்கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில், ஈரோடு நந்தா கல்லூரி வெற்றிபெற்றது. கோவை பாரதியார் பல்கலை., அணி, 9-0 என்ற கோல் கணக்கில் கோபி கலைக் கல்லூரி அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், கோவை டாக்டர் என்.ஜி.பி., கலைக் கல்லூரி அணி, 9-0 என்ற கோல் கணக்கில், எஸ்.ஆர்.கே.வி., கல்லூரியை வென்றது. உடுமலை அரசு கலைக்கல்லூரி அணியை, 5-0 கோல் கணக்கில், கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி வீழ்த்தியது. முதற்கட்ட போட்டி முடிவில், கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியும், கோவை பாரதியார் பல்கலை., அணியும் அதிக கோல் கணக்கில் வெற்றிபெற்று, முன்னிலையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்