உள்ளூர் செய்திகள்

ஆரோக்கியமான ஆதிவாசி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

கூடலூர்: கூடலூர், புளியாம்பாறை கோழிகொல்லி ஆதிவாசி கிராமத்தில், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கம் சார்பில், ஆரோக்கியமான ஆதிவாசி குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயா தலைமை வகித்து, சத்துகள் குறைவினால் ஏற்படும் நோய்கள்; ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். மரப்பாலம் கிராம செவிலியர் புவனேஸ்வரி, பெண்களின் உணவு முறைகள், தாய்சேய் நலம் மற்றும் சுகாதார முறைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை தவிர்ப்பது குறித்து விளக்கினார். தொடர்ந்து, ஆதிவாசி தாய்மார்களிடம், குழந்தைகள் உடல் சார்ந்த 10 கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில், மூன்று வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் தேர்வுசெய்து பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆதிவாசி குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்