உள்ளூர் செய்திகள்

சத்துணவு சாப்பிட்டு மயங்கிய அரசு பள்ளி மாணவர்கள்

சிவகங்கை: சிவகங்கை அருகே சத்துணவு சாப்பிட்டு மயங்கியதாக அரசு பள்ளி மாணவர்கள் இருவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வீரவலசை அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் அதே ஊரைச் சேர்ந்த வைரமணி மகன் வைரபாண்டி (5ம் வகுப்பு), சாந்தினிதேவி (4ம் வகுப்பு) உட்பட சிலருக்கு மதியம் சத்துணவு சாப்பிட்ட பின், மயக்கம்,வயிறு வலி ஏற்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர், வைரபாண்டி, சாந்தினிதேவியை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டி.இ.ஓ.,சாராள்பேபியிடம் கேட்டபோது, "நான்கு பேருக்கு மட்டும் லேசான வயிறு வலி ஏற்பட்டுள்ளது. அதற்கான முதலுதவி செய்யப்பட்டு, இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்