உள்ளூர் செய்திகள்

இடிந்து விழும் அபாய நிலையில் அங்கன்வாடி மையம்

காஞ்சிபுரம்: பொன்னியம்மன்பட்டறை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, பொன்னியம்மன்பட்டறை பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதில், தற்போது 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டடத்தின் சமையல் அறையில் மேற்கூரை அனைத்தும் இடிந்து விழுந்து வருகிறது. சமையல் பொருள் வைக்கும் அறையும் மழைக்கு ஒழுகுகிறது. இதனால், இந்த கட்டடம் எந்த நேரத்தில் ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் அதன் ஊழியர்கள் உள்ளனர். இதை தவிர, குழந்தைகள் படிக்கும் அறைக்குள், குரங்குகள் நுழைந்து, பாடம் சொல்லி கொடுக்க வைக்கப்பட்டிருக்கும் உபகரணங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி விடுகின்றன. குழந்தைகள் துாங்குவதற்காக வாங்கப்பட்ட விரிப்புகளையும் குரங்குகள் கிழித்து சேதப்படுத்தி உள்ளன. இதனால், இந்த அங்கன்வாடி மையத்திற்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறுகையில், "இந்த மையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுகிறது. ஒரு புறத்தில் குரங்குகள் உள்ளே சென்று தொந்தரவு செய்கின்றன. சமையல் அறை எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்