உள்ளூர் செய்திகள்

பாலியல் புகார்; பள்ளி தலைமை ஆசிரியர் ’சஸ்பெண்ட்’

கோவை: கோவை கிணத்துக்கடவு ஜர்க்கார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யாசாமி, தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக, கோவை பெரியகளந்தை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சுகுணா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அளிக்கப்பட்ட இப்புகார் தொடர்பாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி தலைமையில், சிறப்புக் குழு அமைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், ”இரண்டாம் கட்ட விசாரணை முடிந்துள்ளது. பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், தலைமை ஆசிரியர் அய்யாசாமி ’சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். புகார் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்றார். இது குறித்து தலைமை ஆசிரியர் அய்யாசாமி கூறுகையில், ”இது பழிவாங்கும் நடவடிக்கை. ஆசிரியர் சங்கங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உண்மையான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. தற்போது, புகாரின் பேரில் ’சஸ்பெண்ட்’ செய்துள்ளனர். முறையான விசாரணை இன்னும் முடியவில்லை,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்