உள்ளூர் செய்திகள்

கொலம்பஸ் கண்டுபிடிப்பிற்கு முன்பே இந்திய அமெரிக்க உறவு

மும்பை: ’கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு முன்னரே இந்தியாவுக்கு, அமெரிக்காவுடன் தொடர்பு இருந்தது’ என, இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில், லக்னோவில் உள்ள பீர்பல் சஹானி கல்வி நிறுவனத்தின் கே.எஸ்.சரஸ்வத் அறிக்கை அளித்து, விளக்கினார். அதற்காக அவர், இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள கோவில்களில் உள்ள சிற்பங்களில், மக்காச்சோளம் மற்றும் ஆப்பிள் பழம் போன்ற உருவங்கள் இடம்பெற்றிருந்ததை சுட்டிக் காட்டினார். அது போல, சென்னையைச் சேர்ந்த, சர்மா சென்டர் பார் ஹெரிடேஜ் எஜுகேஷன் என்ற அமைப்பின், டாக்டர் சாந்தி பாப்பு என்பவர், ’மனித இனம் தோன்றியதாக கருதப்படும் காலத்திற்கு முன்னரே, இந்தியாவில் மனிதர்களைப் போன்ற ஜீவராசிகள் இருந்ததற்கான ஆதாரங்கள், சென்னை அருகே உள்ள அதிராம்பாக்கம் என்ற இடத்தில் மேற்கொள்ளப் பட்ட தொல்பொருள் ஆய்வில் தெரிய வந்தது’ என்று ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்