விண்வெளியில் சாதனை!... ஆனால் சுற்றுச்சூழலில்?: விஞ்ஞானி வேதனை
மத்திய தொழில்நுட்பத் துறை சார்பில் தண்ணீர், சுத்தம், சுகாதாரம் குறித்த அறிவியல் கண்காட்சி நடந்தது. இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது: செயற்கைகோள்களை செலுத்த வெளிநாடுகளை தேடிச் சென்ற நிலை மாறி, ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் செயற்கைக் கோள்களை நம் ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு செலுத்துகிறோம். இந்தியா சார்பில் ஜி.பி.ஆர்.எஸ்., எனப்படும் விகேஷனுக்கான ஏழு புதிய செயற்கைக் கோள்கள் செய்யும் பணி இறுதி நிலையில் உள்ளது. தண்ணீர், காற்று மாசுபடுவது நோய் பரவ காரணம். சுற்றுச்சூழல் மாசால் தட்ப, வெப்ப நிலை மாறி மழை பெய்வதும் குறைந்துள்ளது. இருபதாண்டுகளுக்கு முன் இலவசமாக கிடைத்த தண்ணீரை தற்போது ரூ.25க்கு வாங்குகிறோம். இன்னும் 20 ஆண்டுகளில் ரூ.100க்கு விற்றாலும் ஆச்சரியமில்லை. ஆரோக்கியம் இல்லாத சமுதாயத்தால் எந்த பயனும் இல்லை. சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால்தான், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். உலகில் 97 சதவீதம் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள 3 சதவீதத்தில், 1 சதவீதம் குடிக்கலாம். அதிலும் 0.26 சதவீதமே சுத்தமான தண்ணீர். இந்நிலை நீடித்தால் குடிநீர் என்பது கேள்விக்குறியாகும்" என்றார்.