சர்வதேச யோகாசன போட்டிகளில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை!
ராமநாதபுரம்: புதுச்சேரியில் நடந்த சர்வதேச யோகாசன போட்டிகளில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர். புதுச்சேரியில் ஜன., 4 முதல் 7 வரை நடந்த சர்வதேச யோகாசனப் போட்டிகளில் 60 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 10 முதல் 15 வயது பிரிவு போட்டியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் வசந்தராஜன், இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக்., பள்ளி 7ம் வகுப்பு மாணவர் ரஜத் ஆகியோர் 4ம் இடம் பிடித்தனர். ஆண்களுக்கான 25 முதல் 30 வயது பிரிவு போட்டியில் யோகா பயிற்சியாளர் சரவணன் 3ம் இடம் பிடித்தார். சாதனை வீரர்களை சர்வதேச யோகா வல்லுனர் பத்மநாபன் பாராட்டினார்.