கல்லூரி இடமாற்றத்தைக் கண்டித்து மொட்டை அடித்துப் போராட்டம்
சென்னை: சட்டக் கல்லுரியை இடமாற்றம் செய்வதை கண்டித்து, 5வது நாளாக, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், நேற்று மொட்டை அடித்து போராட்டத்தை தொடர்ந்தனர். சென்னை, உயர்நீதிமன்றத்தை ஒட்டி உள்ள சட்ட கல்லுாரியை இரண்டாக பிரித்து, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் அமைக்க, அரசு முயல்வதாக தகவல் வெளியானது. இதனால், கடந்த 4ம் தேதி முதல், சட்ட கல்லுாரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாணவர்கள் சிலர், தமிழக அரசு என எழுதப்பட்ட பொம்மையை பாடை கட்டி துாக்கி, ஒப்பாரி வைத்தனர்; மொட்டை போட்டு கொண்டனர்.