உள்ளூர் செய்திகள்

பேருந்து இல்லாமல் அவதிப்படும் அரசு கல்லூரி மாணவர்கள்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர்- கமுதி ரோட்டில், அரசு கல்லூரி 2013 ல் துவங்கப்பட்டது. இப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரி துவங்கும் நேரத்தில் அரசு டவுன் பஸ்கள் இல்லை. மாறாக காலை 10.20 மணிக்கு மட்டுமே, முதுகுளத்தூர்- கமுதிக்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் தாமதமாக வகுப்புகளுக்கு செல்லும் நிலை உள்ளது. பேராசிரியர்கள் பற்றாக்குறையால் தினமும் 2 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தும் நிலையில், பஸ் வசதி இல்லாததும் மாணவர்களை பாதித்து வருகிறது. இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், "வெளியூர்களிலிருந்து, கல்லூரிக்கு வந்து போகும் நேரங்களில் அரசு டவுன் பஸ்களை இயக்க, போக்குவரத்து துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. அரசு கல்லூரிகளில் படித்தால், கட்டணம் இருக்காது என சேர்ந்த மாணவர்கள், பஸ் கட்டண சுமையால் பாதிக்கப்படும் நிலை உள்ளது" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்