சிதிலமடைந்த நிலையில் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம்
தியாகதுருகம்: அசகளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. தியாகதுருகம் அடுத்த அசகளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சிமென்ட் ஓடு அமைக்கப்பட்ட 5 வகுப்பறை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேற்கூரை ஓடு உடைந்து விழுந்து கிடக்கிறது. இதில் சில வகுப்பறையில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்துவது அச்சுறுதலாக உள்ளது. மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டடம் இல்லாமல் மரத்தடியில் அமரவைத்து பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதனை இடித்து விட்டு புதிய வகுப்பறை கட்டடம் அமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள், கோரிக்கை விடுத்து வருகின்றனர். சேதமடைந்த வகுப்பறை கட்டடம் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. மாணவர்களின் வசதிக்காக இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைத்து கொடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.