உள்ளூர் செய்திகள்

மின் புத்தகங்கள் பயன்பாடு; காமராஜ் பல்கலை முதலிடம்

மதுரை: மின் இதழ்கள், மின் புத்தகங்கள் அதிக அளவில் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ததற்காக, தமிழக பல்கலைகளில் மதுரை காமராஜ் பல்கலை நுாலகம் முதலிடம் பெற்றுள்ளது.பல்கலை மானியக் குழுவிற்கு உட்பட்ட தகவல் வலைதள இணைய மையம் (இன்பிலிப்நெட்) சார்பில் தேசிய அளவில் பல்கலை நுாலகங்கள் செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்து ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப்படுத்தப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில் இந்த ஆண்டு தேசிய அளவில் அண்ணா பொறியியல் கல்லுாரி நுாலகம் 7ம் இடமும், மதுரை காமராஜ் பல்கலை நுாலகத்திற்கு 9ம் இடமும் கிடைத்துள்ளது. தொழில்நுட்பக் கல்லுாரிகள் பிரிவை தவிர்த்து தமிழக பல்கலைகளில், காமராஜ் பல்கலை முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் பல்கலை பதிவாளர் ராஜசேகருக்கு யு.ஜி.சி., சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலை நுாலகர் சுரேஷ் கூறுகையில்: இந்நுாலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இதழ்கள், 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் புத்தகங்களை, மாணவர்கள்,ஆராய்ச்சியாளர், பேராசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவோர், பதிவிறக்கம் செய்யப்படும் எண்ணிக்கை அடிப்படையில், 4 லட்சத்து 92 ஆயிரத்து 79 புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு தேசிய அளவில் 13 வது இடம் பெற்றிருந்தது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்