உள்ளூர் செய்திகள்

பி.எட்., கட் ஆப் அறிய இணையதளத்தில் புதுவசதி

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. மொத்தமுள்ள, 1,750 இடங்களுக்கு, 7,440 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களில், 1,130 பேர் பி.இ.,பி.டெக்., பட்டதாரிகள். பி.எட்., படிக்க விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான, கட்ஆப் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும், 28 முதல் அக்டோபர், 5ம் தேதி வரை நடக்கும், கலந்தாய்வு விவரங்களும், கல்லுாரி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக, http://www.ladywillingdoniase.com என்ற இணைய தளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட, கட் ஆப் விவரங்களை பார்க்கும் வகையில், தனியாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. http://61.8.146.180/ladywillingdon/default.Aspx என்ற இணைப்பில், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்தால், மதிப்பெண்ணை காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்