உள்ளூர் செய்திகள்

பல்கலைக் கழக பேராசிரியருக்கு செவாலியே விருது அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியருக்கு பிரெஞ்சு அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு துறை பேராசிரியர் பன்னீர்செல்வம், துறைத் தலைவர், பதிவாளர் பொறுப்புகளை வகித்துள்ளார். இவரின் 35 ஆண்டுகால பிரெஞ்சு கல்வி பணியை பாராட்டி, தற்போது செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்தியாவிற்கான பிரெஞ்சு துாதர் பிரான்சுவா ரிஷியே தெரிவித்து, கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நாடுகளுக்கு இடையே மொழி மற்றும் கலாசார பரிவர்த்தனைகளுக்கு ஆற்றிய பங்களிப்பை பிரெஞ்சு அரசு பாராட்டி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி பிரெஞ்சு துணை துாதரகத்தில் நடக்கும் விழாவில் செவாலியே விருது, நற்சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் என பிரெஞ்சு துணை துாதர் பிலிப் ழான்வியே காமியாமா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்