உள்ளூர் செய்திகள்

தேசிய தபால் வார நிகழ்ச்சிபள்ளி மாணவர்கள் பங்கேற்பு

ஊட்டி: கோத்தகிரி தபால் அலுவலகத்தில், தேசிய தபால் வார கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக குன்னுார், புனித அந்தோணியார் பள்ளியை சேர்ந்த, 40 குழந்தைகள் தபால் அலுவலகத்துக்கு வந்து பார்வையிட்டனர். அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். உதவியாளர் முருகேசன் தபால் சேவைகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில், தபால் சேவைகள், பல்வேறு பண பட்டுவாடா, சேமிப்பு கணக்குகள், ஸ்டாம்ப் சேகரிப்பதன் அவசியம், என் தபால் தலை திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்