சிறப்பு பள்ளி ஆசிரியர் சங்க ஆலோசனை கூட்டம்
சேலம்: தமிழ்நாடு குழந்தை தொழிலாளர் சிறப்புப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் வாசுகி, டில்லிபாபு ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது. கல்வி தகுதிக்கு ஏற்ப, தொழிலாளர் துறையில் நிரந்தர பணியுடன் கூடிய ஊதிய உயர்வு வேண்டும். பார்வையற்றோர் பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு காலி பணியிடங்களில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பி.எட்., டி.டெட்., டி.டி.சி., முடித்தவர்களுக்கு கல்வித்துறையில் பணி வழங்க வேண்டும். வயது கடந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள், கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.