உள்ளூர் செய்திகள்

ஒன்றரை ஆண்டுக்கு பின் லிபியா பள்ளிகள் திறப்பு

திரிபோலி: உலகில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில், பயங்கரவாத தாக்குதல் மற்றும் உள்நாட்டு போர் காரணமாக, மூடப்பட்டிருந்த பள்ளிகள், ஒன்றரை ஆண்டுக்கு பின், நேற்று திறக்கப்பட்டன. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில், பயங்கரவாத தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரால், 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அதனால், மாணவர்களை வீட்டில் இருந்தபடியே படிக்கும்படி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்நாட்டின் பெங்காசி நகரில் உள்ள, 254 பள்ளிகளில், தற்போது, 77 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. சில பள்ளிகளில் நிவாரண முகாம்கள் இயங்குவதால், மற்ற பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்று, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்