உள்ளூர் செய்திகள்

தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி திருவிழா கோலாகலம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த தினமலர் மற்றும் கல்வி மலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில் அதிகாலை முத@ல மாணவ மாணவிகள் ஆர்வமுடன் குவிந்தனர். தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி மற்றும் கல்வி மலர் சார்பில் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி திருவிழா கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதிகாலை முதல் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் குவிந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம், பேனா, வினா விடை புளூ பிரிண்ட், இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய ஜெயித்துக் காட்டுவோம், உடம்பும், மனசும் நல்லா இருக்கணும் என்ற தலைப்பிலான கருத்துரை புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன் தமிழ் பாடமும், உளுந் தூர்பேட்டை அடுத்த எடைக்கல் ஸ்ரீசாரதா ஆஸ்ரம ஆசிரியர் மணிமாறன் ஆங்கிலம், புதுச்சேரி பள்ளி கல்வி துணை ஆய்வாளர் வீரப்பன் கணிதம், விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் அறிவியல், விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலு சமூக அறிவியல் பாடத்திற்கும் கருத்துரைகள் வழங்கினர். மதியம் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் இயற்பியல் பாடமும், திருவள்ளுவர் மாவட்டம், கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அண்ணாமலை வேதியியல், அரசமங்கலம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் கணிதம், சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வேல்முருகன் தாவரவியல், தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ராமமூர்த்தி விலங்கியல், விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் கணினி அறிவியல், தியாகதுருகம் ஓய்வு பெற்ற ஆசிரியர் சதாசிவம் வணிகவியல், சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தாமோதரன் பொருளாதார பாடத்திற்கு கருத்துரைகள் வழங்கினர். கடந்தாண்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடமும், மாவட்டத்தில் முதலிடமும் பிடித்த கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கனிமொழி, கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ராகுல், 497 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் இரண்டாமிடம் பிடித்த ஏ.@க.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அபர்ணா, ஸ்ரீவர்ஷா, தேவதர்ஷனி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 1,185 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷோபனா, தியாகதுருகம் மவுண்ட்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி விஜயலட்சுமி, 1,180 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் இரண்டாமிடம் பிடித்த தியாகதுருகம் மவுண்ட்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் மாணவி சுபாஷினி ஆகியோருக்கு, தினமலர் சார்பில் டி.வி.ஆர்., உருவம் பொறித்த வெள்ளி பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி திருவிழாவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் அதிகாலையிலேயே வருகை புரிந்த 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் 20 பேருக்கும், பகல் 11:00 மணி யளவில் வருகை புரிந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 15 பேருக்கும் மற்றும் ஆசிரியர்களின் கருத்துரைகளின் போது சரியான பதில்கள் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற தினமலர் சார்பில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் பயன் தரும் வகையில் இருந்ததாக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பெருமிதத்துடன் கூறினர். கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனம் சார்பில் மாணவ மாண விகளுக்கு பஸ் நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடந்த வி.ஏ.எஸ்., திருமண மண்டபம் வரை இலவச பஸ்கள் இயக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்