உள்ளூர் செய்திகள்

தமிழ்க்கலை மன்றம் சார்பில் கவிதை, கட்டுரை போட்டி

புதுச்சேரி: கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து புதுச்சேரி தமிழ்க்கலை மன்ற பொறுப்பாளர் ஆறுசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்க்கலை மன்ற 27ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இலக்கிய போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கான கவிதை போட்டி, மாணவன் நினைத்தால் என்ற தலைப்பிலும், கட்டுரைப்போட்டி வருங்கால துாண்கள் என்ற தலைப்பிலும், சிறுகதை போட்டி ஒரு புதிய விடியல் என்ற தலைப்பிலும் நடக்கிறது.பொதுமக்களுக்கான கவிதை போட்டி எங்கே தமிழ்நாடு, கட்டுரைப் போட்டி எங்கே என் தமிழன், சிறுகதை போட்டி தமிழன்டா என்ற தலைப்பிலும் நடக்கிறது.போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. மாணவர்கள் பெயர், வகுப்பு, பள்ளி பெயர், முகவரி, மொபைல் எண்ணுடன் தனித்தாளில் எழுதி இணைத்து அனுப்ப வேண்டும். கவிதைகள் மரபு கவிதையாகவோ அல்லது புதுக் கவிதையாகவோ இருக்கலாம். மரபு கவிதையாக இருந்தால் 16 அடிக்குள்ளும், புதுக் கவிதையாக இருந்தால் 60 சொற்களுக்குள் இருத்தல் வேண்டும். கட்டுரை, சிறுகதை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். படைப்புகளை அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் புதுச்சேரி தமிழ்க்கலை மன்றம், காமராஜர் தெரு, வி.பி.சிங்.,நகர், சண்முகாபுரம், புதுச்சேரி 605 009, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 98947-55985 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்