டி.எஸ்.எம்., கல்வி நிறுவனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்வி நிறுவனம் சார்பில், வாக்காளர் விழிப் புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் நடந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு, கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ஜெயசீலன், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகநாதன் வரவேற்றார். முதல் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் லட்சுமி துவக்கி வைத்தார். மாணவர்கள் முக்கிய சாலைகள் வழியாக 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, கோஷமிட்டபடி மந்தைவெளியை அடைந்தனர். நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜு, டி.எஸ்.பி., மதிவாணன், இன்ஸ்பெக்டர் பாண்டியன், கல்லுாரி தாளாளர் மனோகர் குமார், செயலாளர் அசோக்குமார், கல்லுாரி முதல்வர்கள் ஸ்ரீமதி, லதா, கலியன், பாலசுந்தரம் பங்கேற்றனர்.