’செஞ்சுரி’ போட்டது நியூ பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த என்.நிவேதிதா, 1,193 மதிப்பெண் எடுத்து, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். ஆதம்பாக்கம், நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதிய, 169 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், பிறமொழிப்பாடத்தில், என்.நிவேதிதா, சமஸ்கிருதம் - 199, ஆங்கிலம் - 194 மதிப்பெண் மற்ற பாடங்களில், 200 மதிப்பெண் என, மொத்தம் 1,193 மதிப்பெண் எடுத்து, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அதே பள்ளியில் படித்த, வி.அதிதி, எம்.ஹரிதா, ஏ.திவ்யா, என்.நிவேதிதா, யு.சரண்யா, கே.சுபஸ்ரீ, ஆர்.கன்னியப்பன், எப்.முகமது ஜியா ஆகியோர் வெவ்வேறு பாடங்களில், 200 மதிப்பெண் பெற்று உள்ளனர். உள்ளகரம், நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த, கே.ஆர்.விஜய் ஆனந்து, ஆர்.சாம்பவி ஆகியோர், 1,184 மதிப்பெண், எம்.எச்.விக்னேஷ்வரா, ஆர்.ராஜப்பிரியா ஆகியோர் 1,162 மதிப்பெண், வி.துர்கா, 1,157 மதிப்பெண் எடுத்து, பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்று உள்ளனர். அதே பள்ளியில் படித்த, கே.ஆர்.விஜய் ஆனந்து, எஸ்.பாலகிருஷ்ணன், வி.துர்கா, ஆர்.சாமபவி, எஸ்.ஜனனி, ஆர்.சந்தோஷ், எஸ்.விக்னேஷ், எஸ்.விஜய் ஆகியோர், வெவ்வேறு பாடங்களில், 200 மதிப்பெண் பெற்று உள்ளனர்.