உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி பெற ஆர்வம் காட்டும் குழந்தை தொழிலாளர்கள்

கோவை: மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு, சிறப்பு பள்ளிகளில், எளிய முறையிலான அடிப்படை கல்வியை அளித்ததன் வாயிலாக, பள்ளி கல்வியை நிறைவு செய்யும் உந்துதல் கிடைத்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் சார்பில், ௧௪ வயதுக்கு உட்பட்ட வேலை செய்யும் சிறார்கள் மீட்கப்பட்டு, அடிப்படை கல்வி அளிப்பது வழக்கம். இவர்களுக்காக, சிறப்பு பள்ளிக்கூடங்கள் உள்ளன. இங்கு, எட்டாம் வகுப்பு வரை, அடிப்படை கல்வி அளிக்கப்படுகிறது. வெளி மாநிலங்களை சேர்ந்த சிறார்கள் மீட்கப்பட்டாலும், படிக்க விரும்பும் பட்சத்தில், மற்ற பாடங்களோடு சேர்த்து, அடிப்படை தமிழ் கற்பிக்கப்படுகிறது. இங்கு தேர்ச்சியடைந்தோர், அவர்களின் குடியிருப்புக்கு அருகிலுள்ள, அரசு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். இதோடு, திட்டப்பணிகள் முடிவடைந்தாலும், களப்பணியாளர்கள் வாயிலாக, மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் பள்ளிக்கல்வியை நிறைவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நடப்பாண்டில், பிளஸ் ௨ தேர்வு எழுதிய, ௧௩ மாணவர்களில், ௧௧ பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், ஏழு மாணவர்கள், ௧௨௦௦க்கு, ௯௦௦ மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றுள்ளனர். தவிர, பத்தாம் வகுப்பு தேர்வை, ௧௯ மாணவர்கள் எழுதி, முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட மண்டல அதிகாரி விஜயக்குமார் கூறுகையில்,&'&'கோவை மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், ஆங்காங்கே மீட்கப்படும் சிறார்களும், வேலைத்தேடி வந்த பிற மாவட்ட, மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் மத்தியில், கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க, சிறப்பு பள்ளியில் பல்வேறு புதுமையான கற்றல் வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். இதுவும், பிளஸ் ௨ வரை, மாணவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதற்கும், உயர்கல்வியில் அடியெடுத்து வைப்பதற்கும் முக்கிய காரணம். &'&'மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களை அவர்களின் குடும்ப சூழலோடு தொடர்புப்படுத்தி, கல்வி பெற ஊக்குவித்ததற்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களிலும், கூடுதல் முயற்சி எடுத்து, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற, நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்