உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

கோவை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுத்துறை நாளை வெளியிடவுள்ளது. மாவட்டங்களில் இதற்கான பணிகள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது. சுமார், 10 லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில், 45 ஆயிரத்து 947 பேர் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:30 மணியளவில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள், பொது நுாலகங்களில், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தவிர, பள்ளி தகவல் பலகையில் தேர்வு முடிவுகளை ஒட்ட தலமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்