உள்ளூர் செய்திகள்

கல்விக் கொள்கையில் மாற்றம்; மத்திய அரசு ஆலோசனை

பரூக்காபாத்: உ.பி., மாநிலம், பரூக்காபாதில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்ததாவது: நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் நடைமுறையிலுள்ள கல்விக் கொள்கையில், 8-ம் வகுப்பு வரையில் தேர்வுகளில் மாணவர்களை தோல்வியடையாமல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்