உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி ‘உங்களால் முடியும்’ நிகழ்ச்சியில் குவிந்த மாணவர்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த ’தினமலர் உங்களால் முடியும்’ நிகழ்ச்சியில், ஆர்வமுடன் பெற்றோர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். மேலும், தங்களது சந்தேகங்களைக்கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டனர். பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதையடுத்து, மாணவர்கள் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புக்கு செல்ல, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதில், ’கட்-ஆப்’ அடிப்படையில் கவுன்சிலிங்கில் எப்படி பங்கேற்பது, எந்தக்கல்லூரியை தேர்வு செய்வது என்பது போன்ற குழப்பங்கள் மாணவ, மாணவியருக்கும், பெற்றோருக்கும் இருக்கும். குழப்பத்தை போக்கும் வகையில், மாணவர்களுக்கு ஆலோசனை தரும் ’உங்களால் முடியும்’ நிகழ்ச்சி ஆண்டுதோறும் ’தினமலர்’ நாளிதழ் சார்பில் நடத்தப்படுகிறது. இந்தாண்டு இந்த நிகழ்ச்சி, பொள்ளாச்சி ராஜேஸ்வரி மகாலில் நேற்று நடந்தது. காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியை சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கியது. ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ குரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியோரும் இணைந்து வழங்கினர். இந்நிகழ்ச்சியை, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் ஸ்ரீராம், ஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் சேர்மன் ராஜாராம், ஸ்ரீ குரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிர்வாக இயக்குனர் பன்னீர் செல்வம் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, கவுன்சிலிங் முறை, இன்ஜினியரிங் கல்லூரிகள், பாடப் பிரிவுகள் குறித்து பல்வேறு தகவல்களை அளித்தார். கல்லூரிகளை தேர்வு செய்வதில் நிதானம் மற்றும் தெளிவான முடிவெடுக்க வேண்டும்; ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எந்த கல்லூரியில் படிக்க வேண்டும்; எந்த பாடம் படிக்க வேண்டும் என்பதை சரியாக தேர்வு செய்து கொள்ள வேண்டும்,’ என அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாணவர்கள், விளையாட்டு இட ஒதுக்கீடு எப்படி செய்யப்படுகிறது? இருப்பிடச்சான்றிதழ் மற்றும் சான்றுகள் எவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்? கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பது மற்றும் எதனை படித்தால் நல்லது போன்ற விளக்கங்களும் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு ’தினமலர்’ சார்பில் கவுன்சிலிங் வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்