உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்தவர்க்கு ’சி.என்.சி.,’ இலவச பயிற்சி

அன்னுார்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தமிழக அரசின் குறுகிய கால தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வெர்ட்டிக்கல் மெஷினிங் சென்டரில், சி.என்.சி., ஆபரேட்டர் ஆக பணிபுரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு தேறியவர்களுக்கு, தையல் மெஷின் ஆபரேட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 முதல் 40 வயது வரையுள்ள இருபாலரும், பயிற்சிகளில் சேரலாம். பயிற்சி முடிவில் தமிழக அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணமில்லை. போக்குவரத்து செலவு வழங்கப்படும். பொது மற்றும் தனியார் துறையில் வேலை பெற்றுத்தர, நடவடிக்கை எடுக்கப்படும். குப்பேபாளையம் ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிற்சி நடைபெறும். விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 77080 47887 எனும் எண்ணில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்