மாநில அளவில் ரேங்க் பெற்றவர்கள் மீது வழக்கு
பாட்னா: பீஹார் பள்ளி கல்வி வாரியம் நடத்திய தேர்வில் சவுரப் ஷீரிஸ்தா மாநில அளவில் ரேங்க் பெற்றார். அறிவியல் பாடத்தில் மாநில அளவில் ராகுல் குமார் 3ம் இடமும், கலை அறிவியல் பாடத்தில் ருபி ராய் மாநில அளவில் ரேங்க் பெற்றனர். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியை தொடர்ந்து, அவர்களின் தகுதி குறித்து கேள்வி எழுந்தது. எந்த கேள்விக்கும் சரிவர பதிலளிக்கவில்லை. இதனையடுத்து பலத்த சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்ய முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, ராகுல், சவுரப் ஷிரிஸ்தா, ருபி ராய் ஆகியோர் மீதும், பிஷன்ராய் கல்லூரி இயக்குநர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.