உள்ளூர் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நியமனம்

ஒவ்வொரு ஆண்டும் துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை அரசு தரம் உயர்த்தி வருகிறது. நடுநிலைப்பள்ளிகள் வரை உடற்கல்விக்கு தனியாக ஆசிரியரை நியமிப்பதில்லை. கடந்த ஆண்டு வரை நடுநிலைப்பள்ளிகளாக இருந்து, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ள அரசு பள்ளிகளில், அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த, இந்தாண்டு முதல் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், மற்ற பாடங்களுக்கான ஆறு ஆசிரியர்களுடன் கூடுதலாக உடற்கல்வி ஆசிரியரையும் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்