உள்ளூர் செய்திகள்

இலவச கட்டாயக் கல்வி மசோதா: கல்வியாளர்கள் எதிர்ப்பு

அனைவருக்கும் சம கல்வி வாய்ப்புகளை வழங்க இந்த மசோதா உதவாது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த சத்கோபால் தெரிவித்துள்ளார். 6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி விடுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், இதுகுறித்து இந்த மசோதா மௌனம் சாதிக்கிறது என்றார். பின்தங்கிய, பொருளாதாரரீதியாக நலிவடைந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் குழந்தைகளுடன் இந்தக் குழந்தைகளும் ஒரே வகுப்பறையில் அமர வைக்கப்படுவார்களா என்பது குறித்தும் தெளிவு படுத்தப்படவில்லை என்றும் அவர் குறைகூறியுள்ளார். இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்னமும் அனுமதி அளிக்கவில்லை. இந்த மசோதாவைத் திருப்பி அனுப்பும்படி குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொள்ள இருக்கிறோம். இந்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்