உள்ளூர் செய்திகள்

தமிழ் இணைய பல்கலை இயக்குனர் தேர்வுக்கு குழு

சென்னை: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் புதிய இயக்குனரை தேர்வு செய்ய, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழக தலைவர் குழந்தைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் அடுத்த இயக்குனரை நியமிக்க தகுதியானவர்களை பரிந்துரைக்க, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் அனந்தகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் ஆகிய மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்குள் இக்குழு தனது பணியை நிறைவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்