நீட் தேர்வுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான, ஜே.இ.இ., தேர்வு ஆகியவற்றை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தாண்டு திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.அறிவுறுத்தல்மே, 3ல் நடத்த திட்டமிட்டிருந்த நீட் தேர்வு, ஜூலை, 26க்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா பாதிப்பு குறையாததால், செப்., 13க்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. &'கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத நிலையில், நீட் தேர்வை நடத்துவது, மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்&' என, சில மாணவர்களின் பெற்றோர் மற்றும் சில மாநில அரசுகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், திட்டமிட்டபடி தேர்வை நடத்தும்படி, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.இதன்படி, ஜே.இ.இ., பிரதான தேர்வு, கடந்த, 1ல் துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, நீட் தேர்வை, 13ல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன. இது குறித்து, என்.டி.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: நீட் தேர்வை எழுதுவதற்காக, நாடு முழுதும், 15.97 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துஉள்ளனர். தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையில், தேர்வு மையங்களின் எண்ணிக்கை, 2,545லிருந்து, 3,843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்வு அறையில், ஏற்கனவே, 24 மாணவர்கள் தேர்வு எழுதினர்.தற்போது, 12 மாணவர்கள் மட்டுமே ஒரு அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுத வரும் மாணவர்கள், என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை விளக்கும் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு எந்தவித இடையூறுமின்றி மாணவர்கள் வருவதை உறுதி செய்யும் விதமாக, போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், என்.டி.ஏ., சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.உறுதிமேற்கு வங்கம், ஒடிசா, பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்கள் போக்குவரத்து வசதி செய்து தருவதாக உறுதி அளித்துஉள்ளன. தேர்வு மையங்களின் நுழைவாயிலில் கிருமி நாசினி வைக்கப்படும். அடையாள அட்டைக்கு பதிலாக, &'பார் கோடு&' தொழில்நுட்ப வசதி வாயிலாக, மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களுக்கும் முக கவசம் வழங்கப்படும். தேர்வு மையங்களில் தரப்படும் முக கவசங்களை அணிந்து தான், தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.