உள்ளூர் செய்திகள்

செயின்ட் ஜோசப் இன்ஜி., கல்லூரிக்கு விஸ்வகர்மா விருது

சென்னை: சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் இன்ஜி., கல்லுாரிக்கு, &'விஸ்வகர்மா விருது&' வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு, விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.சமூக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக, இந்த விருது வழங்கப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில், இந்தாண்டுக்கான விருது பட்டியல் தயாரிக்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில், அரசு துறையின் பணிகளுக்கு உதவிய பிரிவில், தமிழகத்தில் உள்ள ஜோசப் இன்ஜி., கல்லுாரி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இம்மாதம், 17ம் தேதி, டில்லியில் நடந்த விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், விருதுகளை வழங்கினார். அப்போது, விருது பெற்ற மற்றும் விருதுக்கு விண்ணப்பித்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளையும், அவர்களின் பணிகளையும், அவர் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்