சாதனை சிறுமி கீதாஞ்சலி டைம் பத்திரிகை தேர்வு
வாஷிங்டன்: தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த, சிறுமி கீதாஞ்சலி ராவை, சாதனை சிறுமியாக, &'டைம்&' பத்திரிகை அறிவித்துள்ளது.அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி ராவ், 15. இவர், &'கைன்ட்லி&' என்ற, &'மொபைல்&' செயலியை உருவாக்கினார். இது, &'ஆன்லைன்&' துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலி இயங்குகிறது.மேலும், &'டெத்திஸ்&' என்ற பெயரில், இவர் உருவாக்கிய செயலி, குடிநீரில் இருக்கும் அசுத்தத்தின் அளவை கணக்கிட உதவுகிறது. இவரை, சிறந்த சிறுமியாக அமெரிக்காவின், &'டைம்&' பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது.