உள்ளூர் செய்திகள்

பசியாற்றும் பள்ளி ஆசிரியைக்கு கிடைக்குமா ஒரு பாஸ்!

கொரோனா நோய் தொற்று காலத்திலும், உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு, பள்ளி ஆசிரியை ஒருவர், தினமும் உணவு வழங்கி வருகிறார்.கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சாலை ஓரங்களிலும், பஸ் ஸ்டாண்டுகளிலும் வசிப்பவர்களுக்கு உணவு கிடைக்காமல் பசியில் தவிக்கின்றனர். தினசரி கூலி வேலைக்கு சென்று, அந்த பணத்தில் தான் உணவுக்கு தேவையான பெருட்கள் வாங்க வேண்டும் என்ற நிலையிலும், பல குடும்பங்கள் இருக்கின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் பல தன்னார்வலர்கள் பல்வேறு பகுதிகளில் உணவு வழங்கி வருகின்றனர். சிங்காநல்லுார், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி பகுதியில் வசிக்கும், தர்ஷினி, 27, தனியார் பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியையாக உள்ளார். இவர் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கும், உணவின்றி தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கும், தினமும் உணவு வழங்கி வருகிறார். உறவினர்கள் உதவியுடன், வீட்டில் செய்த உணவை &'பேக்&' செய்து, தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்று, தேவைப்படுவோருக்கு, வழங்கி வருகிறார். தினமும் மதிய உணவு வழங்கி வந்த இவர், தற்போது, ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டுள்ளதால், மதியம் உணவளிக்க வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவின்றி பசியில் தவிக்கும் ஆதரவற்றோருக்கு, உணவளிக்கும் தன்னார்வலர்களுக்கு கடந்த முறை அளித்தது போல் இந்த முறையும், &'பாஸ்&' அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் பலரின் பசியை போக்க முடியும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்