உள்ளூர் செய்திகள்

வாகன ஆய்வாளர் பதவி நேர்முக தேர்வு நிறுத்தம்

சென்னை: மோட்டார் வாகனஆய்வாளர் பதவிக்கான நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக் குறிப்பு:மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை- - 2 பதவிக்கான நேர்முக தேர்வு, 19ம் தேதி முதல் 24 வரைதேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்முக தேர்வை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, நேர்முக தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்