உள்ளூர் செய்திகள்

முதுகலையில் தங்கம் வென்ற மாணவருக்கு கவர்னரால் கவுரவம்

ஊட்டி வேலிவியூ பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினரின் மகன் நவநீதன். சிறு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நவநீதன் கல்லூரி படிப்பு வரை மிகவும் சிரமப்பட்டு படித்தார். இளங்கலை படிப்பை முடித்து கடந்த இரண்டாண்டுகள் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.   கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்வில் பாரதியார் பல்கலைகழகத்தில் வன உயிரியியல் பாடப்பிரிவில் முதல் மதிப்பெண்கள் பெற்று தங்க பதக்கத்தை பெற்றுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 24ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில், மாநில கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா நவநீதனுக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். தங்க பதக்கம் பெற்ற நவநீதன் வன உயிரியியல் பாடப்பிரிவில் பி.எச்.டி., படிக்க உள்ளதாக தெரிவித்தார். வறுமையை வென்று, தங்க பதக்கம் பெற்ற நவநீதனை அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்