உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி., படிக்க விருப்பமா ஒலிம்பியாட் தேர்வு எழுதுங்கள்

தேசிய அறிவியல் தொழில் நுட்ப கழகம் சார்பில் 10 நாள் அடிப்படை அறிவியல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்க மதுரை யாதவர் கல்லூரியில் நடக்கிறது. இக்கருத்தரங்கில் தினமும் ஒரு விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பேசினர். அறிவியல் திட்ட அறிக்கை தயார் செய்வது பற்றிய பயிலரங்கு நடந்தது. இப்பயிலரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தேசிய அளவில் தேர்வு நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இன்டெல் நிறுவனம் சார்பில் நடக்கும் உலக அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.சென்னை அறிவியல் நகர் இயக்குனர் அய்யம்பெருமாள் பேசுகையில்; அறிவியலில் வளர்ச்சி பெற்ற நாடுகளே, உலகில் வளர்ந்த நாடாக உள்ளன. இந்திய மாணவர்களுக்கு அடிப்படை அறிவியலில் ஆர்வம் இல்லை. இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. கணிதம், இயற்பியல், வேதியில், உயிரியல் பாடங்களில் ஒலிம்பியாட் தேர்வில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் வெற்றி பெற்றால் எய்ம்ஸ், ஐ.ஐ.டி., படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்றார்.இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை முத்து கூறுகையில், சந்திரயான்செயற்கை கோள்ஏராளமான தகவல்களை அனுப் பியது. இத்தகவல்கள் எதிர்காலத்தில் மனிதன் வேற்று கிரகங்களில் வாழ உதவும். இதுவரை நாம் செயற்கை கோள் களைஅனுப்பவெளி நாட்டின் உதவியை நாடினோம். தற்போது மற்ற நாடுகள் நம்முடன் சேர்ந்து செயற்கை கோள்களை அனுப்ப தயாராக உள்ளன என்றார்.கருத்தரங்கில் கோல்கட்டா எஸ்.என். போஸ் அறிவியல் மைய விஞ்ஞானி பார்த்தகுகா பேசுகையில்,  கணிதமும், அறிவியலும் இணைந்து புதிய பரிணாமம் அடைந்து வருகிறது. வெளி நாடுகளில் குவான்டம் கம்பியூடேஷன் படிப்பு தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கணித உயிரியல் படிப்புகள் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம் உடலில் உள்ள டி.என்.ஏ மூலம் மருந்து தயாரிக்க இவை உதவும் என்றார்.  பத்தாம் வகுப்பில் அறிவியல், கணித பாடங்களில் 95 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறிவியில் துறை ஒருங்கிணைப்பாளர் நவராஜ், பேராசிரியர் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்