உள்ளூர் செய்திகள்

நீட் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கட்டாய உளவியல் ஆலோசனை

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு எழுதிய 1.45 லட்சம் மாணவர்களில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர். 65,823 பேர் தேர்ச்சி பெறவில்லை. அந்த மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் அளித்த பேட்டி:சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள 104 மற்றும் 144516 ஆகிய எண்களில், மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. நீட் தேர்வு எழுதியவுடன், 54,374 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், 177 மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தகுந்த உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தற்போது, தேர்ச்சி பெறாத மாணவர்களின் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், மாணவர்கள், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்