உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி வருகையால் நந்தி மலையில் தடை விதிப்பு

சிக்கபல்லாபூர்: உலக பிரசித்தி பெற்ற நந்தி மலையில் இரண்டு நாட்கள் பொது மக்களின் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிக்கபல்லாபூர் மாவட்ட நிர்வாகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:சிக்கபல்லாபூரின் முத்தேனஹள்ளிக்கு, ஜூலை 3ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகை தருகிறார். அவரது பாதுகாப்பை கருதி, இரண்டு நாட்கள் நந்தி மலை மற்றும் ஸ்கந்த மலைக்கு, பொது மக்களின் வருகைக்கு, தடை விதிக்கப்பட்டுஉள்ளது. முந்தைய நாளான ஜூலை 2ல் காலை 6:00 மணி முதல் ஜூலை 3ன் மாலை 6:00 மணி வரை பொது மக்கள் ஸ்கந்த மலையிலும், நந்திமலையிலும் நுழைய அனுமதி இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்