உள்ளூர் செய்திகள்

உள்ளூர் மாணவர் இட ஒதுக்கீடு: காங்., மனு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என காங்., சார்பில் மனு அளிக்கப்பட்டது.புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாணவர் காங்., தலைவர் ஹர்ஷவர்தன், காங்., பிரமுகர் சேகர் ஆகியோர், புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் குர்மீத் சிங்கை நேற்று சந்தித்து பேசினர்.அப்போது, புதுச்சேரி மாணவர்களுக்கு, பல்கலையில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாணவர் காங்., சார்பில் துணைவேந்தரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி பல்கலையில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளிலும் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, பல்கலையின் ஆட்சி மன்றக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பும்படி வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தினார்.மேலும், இதுதொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் பேசுவதாகவும், கல்வித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவில் எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்