நர்சிங் படிப்பில் மூன்றாம் பாலித்தனவருக்கு இடஒதுக்கீடு: கேரளா
திருவனந்தபுரம்: நர்சிங் படிப்பில், மூன்றாம் பாலித்தனவருக்கு இடஒதுக்கீடு வழங்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.அம்மாநில, சுகாதாரத்துறை அமைச்சர், வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்:மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக, அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதல் முறையாக, இளநிலை நர்சிங் படிப்பு மற்றும் பொது நர்சிங் படிப்புகளில், மூன்றாம் பாலித்தனவருக்கு, தலா ஒரு இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, நர்சிங் படிப்புகளில் அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.