முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு
புதுச்சேரி: முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் ஒதுக்கீடு மற்றும் என்.ஆர். ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் பயனாளர் ஐ.டி.,யை பயன்படுத்தி, இன்று 31ம் தேதி மாலை 6:00 மணிக்குள் தெரிவிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று வரை தங்களது பாட விருப்பங்களையும் புதுப்பிக்கலாம். சேர்க்கையின் போது, ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் உள்ள கோரிக்கையின்படி சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.