எல்.டி.சி., தேர்வு தேதியை மாற்ற வலியுறுத்தல்
புதுச்சேரி: எல்.டி.சி., தேர்வும், தட்டச்சு தேர்வும் ஒரே தேதியில் வருவதால் எல்.டி.சி., தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என விவேகானந்தர் கோச்சிங் சென்டர் நிர்வாகி நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. அதன்படி தற்போது யூ.டி.சி., தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தேர்வாளர்கள் அறிவிக்கபட்டுள்ளனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் அரசு பணியில் நாமும் சேரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர் பணிக்கான தேர்வு வரும் 27 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் தட்டச்சு தேர்வும் நடைபெற உள்ளது. இதனால் தேர்வு எழுதுவோர் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தவிர்க்க, எல்.டி.சி. தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், தேர்வர்கள் இரு தேர்வையும் சிரமமின்றி எழுத வழிவகுக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.