உள்ளூர் செய்திகள்

கல்விசாரா மன்ற போட்டிகள் இம்மாத இறுதியில் அறிவிப்பு

பொள்ளாச்சி: கல்விசாரா செயல்பாடுகளுக்கான போட்டிகள், இம்மாத இறுதியில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்களை தயார்படுத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிப்போருக்கு, வாரந்தோறும் இரு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், இலக்கிய மன்றம், கல்விசாரா மன்ற செயல்பாடுகள், வானவில் மன்றம், நுாலக வாசிப்புக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாதந்தோறும் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி, தகுதியான மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவர்களுக்கு இம்மாத இறுதியில், வட்டார அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கிய மன்றத்தில், பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள், சிறார் திரைப்படம் தொடர்பான போட்டிகள், வினாடி-வினா, வானவில் மன்ற போட்டிகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 12 வட்டாரங்களிலும், போட்டிகள் நடக்கவுள்ள இடம், தேதி, தலைப்பு குறித்து முடிவு செய்து, பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு, வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விரைவில், மாவட்ட அளவிலான போட்டிகள் அறிவிக்கப்படும். மாநில அளவில் முதலிடம் பெறுவோர், வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்