உள்ளூர் செய்திகள்

அனைவருக்கும் கல்வி இயக்க தற்காலிக ஊழியர்களுக்கு சிக்கல்

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆறு மாதங்களுக்கு முன், இவர்கள் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.பத்து ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகங்களில் இன்ஜினியர்கள், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.அரசு, இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் முடிவடையும் போது நீங்கள் பணியில் தொடர முடியாது. பணி நீக்கம் செய்யப்படுவீர்கள். இதை எதிர்த்து கோர்ட் நடவடிக்கைக்கு செல்ல மாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி அரசு வலியுறுத்தி வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நியமனம் செய்து, பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர்.ஆனால், மற்ற பணியாளர்களை மட்டும், திட்டம் செயல்படுத்தும் வரை மட்டுமே பணி செய்ய வேண்டும். அதற்கு பின் நிரந்த பணியிடம் கேட்க கூடாது என கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இந்த ஒப்பந்தத்தில் தற்காலிக பணியாளர்கள் கையெழுத்திட மறுத்து விட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்