உள்ளூர் செய்திகள்

கே.எஸ்.சி, அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு

அனுப்பர்பாளையம்: திருப்பூர், கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.விழாவுக்கு, தலைமை ஆசிரியர் சிவக்குமார், தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன், முன்னிலை வகித்தார். லயன்ஸ் கல்வி அறக்கட்டளையின் சேர்மன் மெஜஸ்டிக் கந்தசாமி, திறந்து வைத்து பேசினார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பாலாஜி, ரகுபதி, சக்தி வேல், ராஜூ, பி.டி.ஏ., தலைவர் மூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனிமொழி, திருப்பூர் லயன்ஸ் கிளப் தலைவர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, கேக் வெட்டி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்