ராணுவத்திற்கு ஆள் தேர்வு: குளிரிலும் குவிந்த இளைஞர்கள்
திருநெல்வேலி: நெல்லையில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்க 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் குவிந்துள்ளனர். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஜனவரி 18ம் தேதி துவங்கிய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதிகாலை 5 மணிக்கெல்லாம் கூட்டம் அலைமோதியது. இரவில் கடும் குளிரிலும் வெளிமாவட்ட இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர்.