உள்ளூர் செய்திகள்

மதுரை காமராஜ் பல்கலையில் குற்றவியல் படிப்பு அறிமுகம்

மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் ‘குற்றவியல் மற்றும் காவல்துறை நிர்வாகவியல்’ படிப்பு முதுகலை பட்டப்படிப்பாக இந்த ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. இப்படிப்பு போலீஸ்துறை, சிறைத்துறை, புலனாய்வு, இதழியல் துறை ஆகியவற்றில் பணியாற்றுவோர் மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்கள், வக்கீல்கள், மனித உரிமை காப்பாளர்கள், பெண் உரிமை அமைப்பினர், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவோருக்கு பயனுள்ளது. இரண்டாண்டு படிப்பான இதில், எட்டு பாடங்கள் கற்பிக்கப்படும். முதலாண்டில் குற்றவியல் கொள்கைகள், குற்றவியல் கோட்பாடுகள், குற்றவியல் சட்டம் மற்றும் நடைமுறைகள், ஆய்வியல் நெறிமுறைகள் கற்பிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் காவல்துறை நிர்வாகம் மற்றும் புலனாய்வு, தண்டனை மற்றும் சீர்திருத்த நிர்வாகம், மனிதஉரிமைகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் இயல், குற்றத்தடுப்பு மற்றும் குற்ற நடத்தையியல் கற்பிக்கப்படும். கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என இயக்குனர் வடிவேலு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்