உள்ளூர் செய்திகள்

அரசு மாதிரி பள்ளி நிலைமை கல்வியாளர்கள் வேதனை

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நேற்று முன்தினம் காலை, எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகள் குறித்து, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார். அந்த பள்ளி, மாவட்டத்தில் உள்ள மாதிரி பள்ளிகளில் ஒன்று. கலெக்டர் ஆய்வின் போது, வகுப்பறை சுவர்களின் பூச்சுகள் பெயர்ந்து, இடியும் நிலையில் இருந்தன.கலெக்டர், மாணவ, மாணவியருடன் கலந்துரையாடிய வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கல்வியாளர்கள் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்க தான், மாதிரி பள்ளிகள் செயல்படுகின்றன. ஆனால், அந்த மாதிரி பள்ளியின் வகுப்பறை கட்டடம் இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம், வகுப்பறை கட்டடம் குறித்து கூறினோம். அவரும் உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தி உள்ளார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்